தீமைகளை அழித்து, தன்னை வேண்டும் பக்தர்களுக்குத் துணையாக நின்று காக்கும் மகாசக்தி அன்னை ஸ்ரீ சூலினி துர்க்கை

ஸ்ரீ சூலினி துர்காம்பிகை பீடம்

அருள் பொழியும் ஸ்ரீ சூலினி துர்காம்பிகை பீடம் திருத்தலம்

அம்மனின் தெய்வீக சிறப்பு

சூலினி துர்காம்பிகை பீடம், சூலம் தாங்கிய சக்தி வடிவமாக அருள்பாலிக்கிறார். "சூலம்" என்பது தீமையை அழிக்கும் சக்தியின் அடையாளம். அம்மன் சூலம் ஏந்தி அருள்வதால், எதிர்மறை சக்திகள், தோஷங்கள் மற்றும் பயங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை.

பக்தர்கள் அம்மனை:
  • குடும்ப பாதுகாவலியாக
  • நோய் நீக்கும் தெய்வமாக
  • தொழில், கல்வி, வேலை முன்னேற்றம் அருளும் சக்தியாக
  • பெண்கள் மற்றும் குழந்தைகளின் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
ஆலயத் திருவிழாக் காட்சிகள்

தெய்வீகத் தரிசனத் தொகுப்பு

சிற்பக் கலையில் மலரும் அம்பிகையின் திவ்ய ரூபம்

கலைவடிவம் பெறும் அன்னை

"அன்னை ஸ்ரீ சூலினி துர்க்கையின் திருவுருவம் சிற்பியின் கைவண்ணத்தில் உயிர்பெறும் உன்னதத் தருணம். கருங்கல் சிலையாகவோ அல்லது பஞ்சலோக வடிவிலோ அன்னை உருவெடுக்கும் இந்தக் கலைப்பணி, பக்தியின் சங்கமமாகும்."